திங்கள், 21 மார்ச், 2011

தலைவர்களுக்குப் புதிய பெயர்கள்


இதோ வந்தே விட்டது சட்டசபைத் தேர்தல்..!

கூட்டணிக் குஸ்திகளிலெல்லாம் ஒரு வழியாக  முடிவுக்கு வந்து , வேட்பு மனுத் தாக்கல்களும் தொடங்கியாகி விட்டது.

கொளுத்தும்  கொடிய வெயிலிலும் வாக்கு சேகரிக்க ஊர் ஊராக , வீதி வீதியாகப் புறப்பட்டு விட்டார்கள் தொண்டர்களும் , தலைவர்களும்.

அவர்களின் சுற்றுப் பிரயாணத்தில் பூத் திறப்பு விழாவும், தண்ணீர் பந்தல் திறப்பு விழாவும் தவறாமல் இடம் பெறும். அதன் ஒரு பகுதியாக குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் வைபவங்களும் நடப்பதுண்டு ( சில சமயங்களில்  வளர்ந்த குழந்தைகளுக்கும் கூட பெயர் சூட்டப்படும்  ) .

காலம் காலமாகத் தலைவர்கள்தாம் பெயர் சூட்ட வேண்டுமா என்ன, ஒரு மாறுதலுக்கு - இன்றைய சூழலுக்குத் தகுந்தவாறு அவர்களுக்கு நாம் பெயர் சூட்டி மகிழலாமே.!




படித்தீர்களா ?  ரசித்தீர்கள்தானே ?

அப்படியென்றால் கார்ட்டூன் பற்றியும் கருத்துக்கள் பற்றியும் உங்கள் அபிப்பிராயங்களைப் பின்னூட்டமிடலாமே ... கொஞ்சம் சோம்பல்படாமல்...!


4 கருத்துகள்:

Tamizh சொன்னது…

அருமையான கார்ட்டூன்,அதற்கேற்ற கமெண்ட் அற்புதம் !

தொடரட்டும் உங்கள் வலை சேவை.

தக்குடு சொன்னது…

இளம் கோ, விரும்பாவளவன் & வீக்காளன் எல்லாம் மிகவும் ரசித்த ஒன்று! வாழ்த்துக்கள்!..:)

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வீக்காளரான வாக்காளருக்கு அனுதாபங்கள்.

நிஷாந்தன் சொன்னது…

பாராட்டு மழை பொழிந்திட்ட அன்பு செல்வங்கள் தமிழ்செல்வி, தக்குடு மற்றும் இராஜராஜேஸ்வரி ஆகியோருக்கு நன்றிகளை சமர்ப்பிப்பதோடு உங்கள் பொன்னான வாக்குகளை ... ( சாரி..சாரி.. தேர்தல் காலமில்லையா, அதனால் வந்த effect ).

கருத்துரையிடுக