திங்கள், 11 ஏப்ரல், 2011

உடல் நலம் பெற ஓர் அற்புத பானம்


உடல் நலத்திற்கு மிகவும் நன்மை செய்யக் கூடிய அற்புத பானம் ஒன்றை நண்பர் மின்னஞ்சலித்திருந்தார்.

செய்முறை மிகவும் எளிது.. கிடைக்கும் பயன்களோ அளப்பரியன...!

பானத்தின் பெயர்: அற்புத பானம்

தேவையான பொருட்கள்: காரட் - 1, பீட்ரூட்-1, ஆப்பிள் - 1

செய்முறை: காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி , ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து  அருந்தவும்.

உத்தரவதமாகக் கிட்டும் நன்மைகள்:

* புற்று நோய் செல்கள் வளருவதைத் தடுக்கிறது

* கல்லீரல், கணையம், சிறு நீரகங்கள் தொடர்பான வியாதிகள் வருவதைத் தடுக்கிறது

* வயிற்றுப் புண்ணை குணமாக்குகிறது

* நுரையீரலைப் பலப்படுத்துகிறது

* இதயத் தாக்குதல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் வருவதைத் தடுக்கிறது

* நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது

* பார்வைத் திறனை அதிகரிக்கிறது.  களைப்படைந்த கண்களுக்கும் , உலர் கண்களுக்கும்  நன்மை பயக்கிறது.

* தசை வலி மற்றும் உடல் வலிக்கு நிவாரணம் தருகிறது

* உடலில் சேரும் நச்சுத் தன்மையை முறிக்கிறது.

* மலச்சிக்கலை எவ்வித சிக்கலுமின்றி குணப்படுத்துகிறது

* சருமத்திற்கு பளபளப்பினைக் கூட்டுகிறது

* அஜீரணம், தொண்டைப் புண் ஆகியவற்றால் ஏற்படும் சுவாச துர்நாற்றத்தை  நிவர்த்தி செய்கிறது

* பெண்களுக்கான மாத விடாய் வலியினைக் குணமாக்குகிறது

* பக்க விளைவுகள் ஏதுமில்லை

* சத்து மிகுந்தது - எளிதில் உடலில் சேரக் கூடியது

* எடைக் குறைப்பிற்கு உதவுகிறது

* இரண்டு வார கால உபயோகத்திலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

அருந்தும் விதம்

- காலையில் வெறும் வயிறில் அருந்தவும்.

- சாறு பிழிந்த உடனேயே அருந்துவது மிகுந்த நன்மை தரும்

- அருந்திய பின்  ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம்

- அதிகப் பலன் பெற காலை ஒரு முறை, மாலை 5 மணிக்கு முன்பு ஒரு முறை என இரண்டு வேளைகள் அருந்தலாம்

குறைந்த செலவில் நிறைந்த பலன் களை வாரி வழங்கும் அற்புத பானத்தை நீங்கள் உடனே அருந்தத் துவங்குங்கள்அளப்பரிய நன்மைகளைப் பெறுங்கள்..!




9 கருத்துகள்:

Chitra சொன்னது…

இப்பொழுதுதான் ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சலை வாசித்து விட்டு வந்தேன். அருமையாக தமிழாக்கம் செய்து இருக்கிறீர்கள்.

சக்தி கல்வி மையம் சொன்னது…

காலையில் ஒரு பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றிகள்..

மோகன்ஜி சொன்னது…

பயனுள்ள குறிப்பு நிஷாந்தன்! பகிர்வுக்கு நன்றி!

சிவகுமாரன் சொன்னது…

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி

நிஷாந்தன் சொன்னது…

சித்ரா மேடம், வேடந்தாங்கல் கருன் ஜி, மோகன்ஜி, சிவகுமாரன்ஜி தங்கள் அனைவருடைய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி .! உடனடியாக ஒரு குவளை அற்புத பானம் அருந்தியது போல் உணர்கிறேன்..

ஆனந்தி.. சொன்னது…

வலைச்சரத்தில் தங்களின் உபயோகமான பதிவை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/to-z-tips-pedia.html

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பயனுள்ள பகிர்வு. நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

mik arumai..)

நிஷாந்தன் சொன்னது…

கவிதாயினி தேனம்மை இலக்குவன் அவர்களுக்கு நன்றி !

கருத்துரையிடுக